சிசிடிவி கேமரா பொருத்தியதால் தகராறு… இளம் வயது திமுக கவுன்சிலர் கொடூரக் கொலை… பின்னணியில் இருக்கும் பெண் குற்றவாளி..?

Author: Babu Lakshmanan
20 September 2022, 10:06 pm

சென்னை : தாம்பரம் அருகே திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம், எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (30). திமுக-வைச் சேர்ந்த இவர், நடுவரப்பட்டு ஊராட்சியின் 7வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திமுக கவுன்சிலர் சதீஷ், கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சதீஷைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, கவுன்சிலர் சதீஷ் தான் குடியிருக்கும் பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியதாகவும், அதனால் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், சதீஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் தரப்பு, கவுன்சிலர் சதீஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், சதீஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனிடைய, திமுக கவுன்சிலர் சதீஷின் கொலையை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!