‘எம்பி, எம்எல்ஏக்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாமா..?’ ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு… நீதிபதி காட்டம்..!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 11:47 am
Quick Share

சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்ததை எதிர்த்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை எடுத்தது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த சூழல், ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியாளர்களின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதாகவும், லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல கட்சிக்கு ஏற்றபடி தன் வண்ணத்தை மாற்றி செயல்பட்டுள்ளதாக காட்டமாக தெரிவித்துள்ளார்.

Views: - 361

0

0