நல்ல அரசாங்கமா…? முதல்ல செந்தில் பாலாஜியை நீக்குங்க… CM ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட ஆர்டர்!!

Author: Babu Lakshmanan
5 September 2023, 7:03 pm
Quick Share

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி அறிவித்தார். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்று அரசாணையை வெளியிட்டார்.

அரசின் இந்த முடிவை எதிர்த்து ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிட வேண்டும் என்றும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது. அதாவது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியல்ல என்றும், இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் எந்தப் பலனும் இல்லை என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.

Views: - 291

0

0