சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு.. தமிழகத்தைச் சேர்ந்தவரை எதிர்ப்பது ஏன்..? பின்னணி என்ன…?

Author: Babu Lakshmanan
7 February 2023, 11:36 am
Quick Share

உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டார்ர்.

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த 5 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது.

Chennai HC Vanniyar -Updatenews360

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று காலை 10.30 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, விக்டோரியா கவுரை நீதிபதியாக நியமிக்க பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியதுடன், விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இன்று காலை பதவியேற்க இருந்த நிலையில், வழக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்தே கொலீஜியம் பரிந்துரைத்திருக்கும் என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்களும் மாணவராக இருந்த போது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்றும் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விக்டோரியா கவுரி உள்பட 5 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

யார் இந்த விக்டோரியா கவுரி?

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்த விக்டோரியா கவுரி, தனது இளங்கலை சட்டப் படிப்பை மதுரை சட்டக் கல்லூரியில் படித்து முடித்தார். இதையடுத்து கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

பின்னர் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கிய நிலையில், பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். படிபடிப்பயாக மத்திய அரசு வழக்கறிஞராக பொறுப்பு ஏற்றார். அப்படியிருக்கும் போது, நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

பாஜக மகளிரணி தேசிய பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். இதனால் அக்கட்சியின் சிந்தாந்தத்தை ஒட்டி செயல்பட்டு வந்திருக்கும் விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Views: - 380

0

0