விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்… போலீசார் வெளியிட்ட புதிய சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 2:14 pm
Quick Share

சென்னையில் போலீசார் தாக்கியதால் விசாரணை கைதி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஏப்.,19ம் தேதி விக்னேஷ் என்ற விசாரணை கைதி, சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Chennai custodial death: CM Stalin announces Rs 10 lakh ex-gratia to  Vignesh's kin | The News Minute

போலீசார் தாக்கியதாலேயே விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் ஒருபுறம் குற்றம்சாட்டி வரும் நிலையில், வலிப்பு ஏற்பட்டுதான் உயிரிழப்பு ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சம்பவத்தன்று இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, போலீசாரை விக்னேஷ் தாக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் பிடியில் இருந்து அவர் தப்ப முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Chennai man dies in police custody, family alleges torture by cops | The  News Minute

அதேவேளையில், உயிரிழந்த விக்னேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் மறுத்ததாகவும், விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்ததாகவும் வெளியான தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.

இளைஞரின் சிறை மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடியும் விசாரணையும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தலைமை செயலக காலனி காவல் நிலைய விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கெல்லீஸ் சந்திப்பில் தப்பியோடும் விக்னேஷை 2 காவலர்கள் விரட்டிப் பிடிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இளைஞரின் உயிரிழப்பு வழக்கில் முக்கிய திருப்புமுனையாக இது இருக்கும் என்று தெரிகிறது.

Views: - 997

0

0