மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்… தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்தி பாதிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 1:03 pm
Quick Share

தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு காணப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

power cut 4 - updatenews360

இருப்பினும், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் வந்து விடும் என்றும், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதனிடையே, கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாட்டல் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், நிலக்கரி வந்த பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.

TTPS achieves lowest generation cost in TN milestone || TTPS achieves  lowest generation cost in TN milestone

210 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய 5 அலகுகளை கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடால் 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரு அலகில் மட்டுமே மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.

இதேபோல, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளைக் கொண்ட முதல் பிரிவும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகைக் கொண்ட இரண்டாவது பிரிவும் செயல்பட்டு வருகின்றன.

நேற்று நிலக்கரி தட்டுப்பாடினால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் முதல் பிரிவில் உள்ள 2,3 மற்றும் 4வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அலகில் மட்டுமே மின்உற்பத்தி நடந்து வருகிறது.

State discoms inefficient … need to open up power sectors to others: RK  Singh | Business News,The Indian Express

இந்த நிலையில், 2வது பிரிவில் கொதிகலன் குழாய் வெடிப்பால் 600 மெகாவாட் மின்உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. நேற்று 7000 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில், சரக்கு ரயில் மூலமாக 16 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டதால், தற்போது 23 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது.

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அனல்மின் நிலையங்கள் முடங்கி போவது, மீண்டும் மின்தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விடுமோ..? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Views: - 900

0

0