கத்தி முனையில் ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம் ; சென்னையில் பயங்கரம்… 5 பேர் கைது…!!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 10:45 am

சென்னையில் ஓடும் காரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளுத்துவான்சேரி அருகே சென்ற போது, அவரது காரை மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

கார் ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதுடன், பெண்ணோடு சேர்த்து காரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர், அங்கிருந்த காலி இடத்தில் அந்தப் பெண்ணை கத்தி முனையில் 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணிடம் இருந்த 8 சவரன் நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போரூர் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

  • rajinikanth increased his salary on jailer 2 எக்குத்தப்பாய் சம்பளத்தை ஏத்திய ரஜினிகாந்த்? ஸ்தம்பித்துப்போன சன் பிக்சர்ஸ்?