இரண்டே நாளில் ரூ.1000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை… இன்று மட்டும் சவரனுக்கு ரூ.544 குறைவு

Author: Babu Lakshmanan
7 July 2022, 10:33 am
Quick Share

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை 2வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது.

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும். பெரும்பாலும் முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால், தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.

அதன்படி நேற்று தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2வது நாளாக தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து, கிலோ ரூ.62,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரு தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,000க்கு மேல் குறைந்திருப்பதால், தங்கம் வாங்க இது சரியான தருணமாக வாடிக்கையாளர்கள் எண்ணுவார்கள் என்று தெரிகிறது.

Views: - 416

1

0