‘பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!!

Author: Rajesh
18 May 2022, 2:10 pm
Quick Share

சென்னை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுத்திருப்பது வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு. நீதி, சட்டம் அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது.

Image

இந்தியா முழுமைக்கான மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக தீர்ப்பு அமைந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது. மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது கவனர் மத்திய அரசிடம் கேட்க தேவையில்லை என்பதை நீதிபதிகள் தெளிவுப்படுத்தி இருக்கின்றனர்.

Image

மனிதாபிமான அடிப்படையில் திமுக அரசு 10 முறை பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியது. 31 ஆண்டு சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதியை களைத்திட எந்த எல்லைக்கும் சென்று போராடிய அற்புதம்மாள் தூய்மையின் இலக்கணம்.

Image
Image

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 624

0

0