இத்தனை பெண்கள் இருக்கும் போது விஜயலட்சுமி தான் கிடைச்சாலா..? சீமான் சொன்ன குட்டி ஸ்டோரி… காயத்ரி ரகுராம் அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 2:45 pm
Quick Share

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், இரு நாட்களுக்கு முன்பு சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, மனைவி கயல்விழியுடன் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜயலட்சுமி விவகாரத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளதா..? என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், ‘ஒருமுறை எனது மனைவி குரல்வளையை பிடித்து, இத்தனை பெண்கள் இருக்கும் போது விஜயலட்சுமி தான் கிடைச்சாலா..?,’ எனக் கேட்டு சண்டையிட்டதாக கூறினார். மேலும், விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக வீட்டில் பேசவோ மாட்டோம் என்று கூறினார்.

சீமானின் இந்தப் பேச்சு தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ‘சினிமாவில் இப்படிப்பட்ட பேச்சுகள் ஏற்றுக்கொள்ளப்படும், சிலர் வீட்டில் ஜாலியாக பேசுவார்கள். ஆனால், ஒரு பெண் கடந்த கால உறவு காரணமாக கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, இந்த தீவிர சூழ்நிலையில் ஒரு வீட்டில் இருப்பது போல் கேமரா முன் பேசுவதற்கு உத்வேகமாகக் கருதப்படும் ஒரு தலைவருக்கு சரியல்ல, அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என தெரிவித்தார்.

Views: - 160

0

0

Leave a Reply