இறங்கி வரும் டெல்லி… விடாப்பிடியில் இபிஎஸ்… அதிமுகவின் குரலாக ஒலித்தாரா ஜெயக்குமார்?!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 4:18 pm
JAYA EPS - Updatenews360
Quick Share

அதிமுக – பாஜக இடையே டெல்லியில் இணக்கம் ஏற்பட்டு உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் இங்கே மோதல் ஏற்படுகிறது. உதாரணமாக மீபத்தில் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பின் வரும் விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.

அதில், அதிமுக – பாஜக கூட்டணி ஒப்பந்தம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எங்கே யாரை களமிறக்குவது, திமுகவை எப்படி எதிர்ப்பது என்று பல விஷயங்களை ஆலோசனை செய்துள்ளனர்.

இதில் அதிமுகவிடம் பாஜக 15 இடங்களை கேட்டதாக கூறப்படுகிறது. 15 இடங்களில் பாஜகவின் டாப் லீடர் களமிறக்கப்படலாம். அதனால் எங்களுக்கு கடந்த முறை போல குறைவான இடங்களை கொடுத்து ஓரம்கட்ட முடியாது என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது.

அதேபோல் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்துள்ளதாம். ஆனால் இதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது .

இந்த சந்திப்பில் வேறு ஒரு பெரிய சம்பவமும் நடந்துள்ளது. அதன்படி பிரதமர் அலுவலகம் சார்பாக ஒரு போன் நம்பர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டு உள்ளதாம். மோடி பர்சனல் பயன்பாட்டிற்கு சில போன்களை பயன்படுத்துகிறார். அதில் ஒரு நம்பரைத்தான் மோடி அலுவலகம் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளதாம்.

மோடியுடன் எளிதாக பேசும் விதமாக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் விதமாக, எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த நம்பரை எடப்பாடிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கான் மவுசு உயர்ந்து உள்ளதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.

இறங்கி வந்த டெல்லி.. அப்படியே எகிறி போகும் அண்ணாமலை: இங்கே அண்ணாமலை எகிறி பேசிக்கொண்டு இருக்கிறார். அங்கே டெல்லி பாஜக இறங்கி பேசுகிறது. இந்த இரட்டை நிலைப்பட்டால் எடப்பாடி குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியுடன் நாம் இணக்கமாக செல்லலாம். ஆனால் அண்ணாமலை இப்படி பேசினால் அவருடன் கூட்டணி வைப்பது எப்படி சாத்தியம் ஆகும். அவர் பேச்சுக்கள் தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும்.

இதை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னதான் டெல்லி நட்பாக இருந்தாலும் தமிழ்நாட்டில் உறவு சரியாக இருந்தால் தானே எல்லாம் சுமுகமாக இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் அண்ணாமலை மீது அப்செட்டில் இருக்கிறதாம்.

இதனாலயே தற்போது ஜெயக்குமார் பாஜகவுடனான கூட்டணி முறிவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 268

0

0