இரு கட்சியினரிடையே வெடித்த மோதல்… அர்ஜூன் சம்பத் அதிரடி கைது :மதுரையில் பரபரப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan6 டிசம்பர் 2023, 9:50 மணி
இரு கட்சியினரிடையே வெடித்த மோதல்… அர்ஜூன் சம்பத் அதிரடி கைது :மதுரையில் பரபரப்பு!!!
அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் போஸ்ட் ஆபிஸ் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மே 17 இயக்கத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை அணிவிக்க வந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அர்ஜூன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
Views: - 336
0
0