உங்களுக்கு நான் இருக்கிறேன்.. பயப்பட வேண்டாம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெம்பு கொடுத்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 டிசம்பர் 2023, 9:00 மணி
mamama
Quick Share

உங்களுக்கு நான் இருக்கிறேன்.. பயப்பட வேண்டாம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெம்பு கொடுத்த அண்ணாமலை!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் புழல் ஏரியை ஒட்டிய பகுதியில் மழை நீர் கால்வாயை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்க வந்தபோது வள்ளலார் நகர் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் நரிக்குறவர் மக்கள் பாசிமணி அணிவித்தும் மாலை அணிவித்தும் அப்பகுதி மக்கள் மலர் தூவியும் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

உங்களுக்கு நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் என ஆறுதல் தெரிவித்த அவர், புயல் கனமழையில் பாதித்த இடங்களில் அரசு செல்லாத இடங்களில் நாங்கள் சென்று நிவாரண பொருட்களை கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இல்லை என்பது புகாராக உள்ளது.

யாரிடம் பிரச்சினைகளை மக்கள் சொல்வார்கள் முகாமில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள். அதிகாரிகளை முழுமையாக களத்தில் இறக்க அரசால் முடியவில்லை மக்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

ஆளும் கட்சியினரை பார்க்க முடிவதில்லை. பாஜக இன்னும் வேகமாக தங்களது பணிகளை துரிதப்படுத்துகிறது. உணவுக்கு குடிநீருக்கு பஞ்சம் இல்லாமல் செய்ய வேண்டும் அரசு இயந்திரம் வேதப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 236

    0

    0