ஆமாம், வாரிசு அரசியல்தான்.. தேவையில்லாமல் கட்சிக்கு அவப்பெயர் வாங்கித் தராதீங்க ; திமுகவினருக்கு CM ஸ்டாலின் அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 7:39 pm

தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி கட்சிக்கு அவப்பெயர் வாங்கித் தர வேண்டாம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது , கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெற்றி ஒன்றே இலக்கு என வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும். மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகளை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்குள் குறைகள் இருக்கலாம். ஆனால் திமுக ஆட்சியில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாது.

எதிரிகள் பரப்பும் அவதூறு கருத்துகளை பொருட்படுத்தாமல், மக்களுக்கு திட்டங்களை கொண்டு செல்லுங்கள். எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம். வெறுப்பு அரசியலால் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது ஏன்?. திமுகவுக்காக ஆளுநர் பிரச்சாரம் செய்து வருகிறார் .

இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படத் தொடங்கிவிட்டார். பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியின் வாரிசுகள் நாங்கள். பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது, என தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?