கோவை வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் ; நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டம்..!!

Author: Babu Lakshmanan
23 August 2022, 8:27 pm
Quick Share

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வந்தடைந்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினை, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் வரவேற்றனர்.

முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக விமான நிலையத்திலிருந்து பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை வரை திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

Views: - 192

0

0