கோவை வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள் ; மறைந்த திமுக நிர்வாகி கோவை தங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல்…!!

Author: Babu Lakshmanan
10 November 2022, 12:44 pm

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் பல ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Cm stalin - updatenews360

அமைச்சர் முத்துச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டம் செல்வராஜ் எம்எல்ஏ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த கோவை தங்கம், கடந்த அக்டோபர் 12ஆம் தேதி உயிரிழந்தார். சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறுவதற்காக வந்துள்ளார்.

Cm stalin - updatenews360

கோவை தங்கம் கடந்த மார்ச் 2021ல் திமுகவில் இணைந்தார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி விட்டது. கோவை தங்கம் கடந்த அக்டோபர் 12-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றியவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!