துபாயில் முதலமைச்சர் ஸ்டாலின்… உலகக் கண்காட்சியில் தமிழக அரங்கை இன்று திறந்து வைக்கிறார்…!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 9:26 am
Quick Share

சென்னை : துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.

4 நாள் அரசுமுறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்றுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சியாகும். இந்த உலக கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ந்தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது.

இதையொட்டி, தமிழக அரங்கினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக, நேற்று தனி விமானம் மூலம் துபாய் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் அங்கம் வகித்துள்ளனர்.

Views: - 428

0

0