ரூ.2 லட்சம் கட்டணம்… நட்சத்திர விடுதிகளுக்கு நிகரான சொகுசு வசதி ; முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த ரயிலில் இவ்வளவு வசதிகளா..?

Author: Babu Lakshmanan
8 December 2022, 11:14 am
Quick Share

சென்னை ; சொகுசு வசதிகளுடன் கூடிய ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசிக்கு பயணிம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசிக்கு இன்று செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மூலமாக தென்காசிக்கு புறப்பட்டார். அவருடன் துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி போன்றோரும் ரயிலில் பயணம் செய்தனர்.

அவர் பயணித்த சலூன் கோச் பெட்டியானது பல்வேறு சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாகும். இந்த கோச்சானது, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களுக்கென பிரத்யேகமாக இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.

இதில் கழிவறை வசதி, இரண்டு படுக்கை அறைகள், உணவு அருந்தும் இடம், சோபா, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இப்பெட்டியானது ரயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படும். பின்புறம் இருக்கும் கண்ணாடி ஜன்னல் மூலம் இயற்கை அழகை ரசித்தவாறு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

உயர் பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் செலுத்தினால் இதில் பொதுமக்களும் பயணம் செய்யலாம்.

இந்த சொகுசு கோச்சில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Views: - 343

0

0