நடைபயிற்சியின் போது வாக்குசேகரித்த CM ஸ்டாலின்… சேலத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம்…!!

Author: Babu Lakshmanan
30 March 2024, 10:57 am

சேலம் கடை வீதியில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வீதி வீதியாக சென்று சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வ கணபதிக்கு வாக்கு சேகரித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வ கணபதி மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து இன்று பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதனை ஒட்டி, நேற்று மாலை தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு, சேலம் வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சேலம் சின்ன கடைவீதி பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, சின்ன கடை வீதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், வழிநெடுகிலும் உள்ள சாலையோர வியாபாரிகளை சந்தித்து திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். சாலையில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்து செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர், சேலம் சின்ன கடை வீதி ராஜகணபதி கோயில் இரண்டாவது அக்ரகாரம் வழியாகச் சென்று தனது நடைபயிற்சி முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டிஎம் செல்வ கணபதி வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • 12th fail fame Vikrant Massey will leave Cinema பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Views: - 281

    0

    0