வந்தாச்சு கூட்டுறவு சங்கத் தேர்தல் : அறிவிச்சாச்சு தேதி… 64 பதவிகளுக்கு தேர்தல் நடத்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 10:52 am

தமிழகம் முழுவதும் 51 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 தற்செயல் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கும், கைத்தறி, தொழில்வணிகத்துறை, சமூக நலத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சித்துறை ஆகிய 5 துறைகளின் கீழ் வரும் 50 கூட்டுறவு சங்கங்களிலும் தலைவர், துணைத்தலைவர், நிர்வாக குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் வரும் 12 ஆம் தேதியும், அடுத்த மாதம் 7 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?