இந்து முன்னணி பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு ; கோவையில் மீண்டும் அராஜகம்… போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 11:51 am
Quick Share

கோவையில் இந்து முன்னணி நகரத் தலைவரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவர், பிஎஸ்சி ஐடி பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இவரின் தந்தை வேல்முருகன் பேருந்தில் நடந்துனராக பணிபுரிந்து வருகிறார். ஹரீஷ் இந்து இளைஞர் முன்னணியின் மேட்டுப்பாளைய நகரத்தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ காரின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்துள்ளனர். இதனையடுத்து காலையில் காரை பார்த்த ஹரீஷ், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், கார் கண்ணாடி உடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கோவையில் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வரும் நிலையில், மற்றுமொரு சம்பவம் அரங்கேறி இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Views: - 418

0

0