சூர்யா, ஜோதிகா, உதயநிதிக்கு சமுதாய ஆஸ்கார் விருது: இதை கொடுப்பது யார் தெரியுமா?…கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

Author: Rajesh
21 January 2022, 6:14 pm
Quick Share

சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதன் பின்னணி குறித்த தகவலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆண்டுதோறும் மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பைக் கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ‘ஜெய் பீம்’ படத்தை தயாரித்ததற்காக சூர்யா, ஜோதிகா இருவருக்கும் 2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க விருது வழங்கப்படவுள்ளது. இதேபோல நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021’ என்ற பிரிவில் சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விழா அடுத்த மாதம் 19ஆம் தேதி அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.

இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, இந்த விருது பற்றியும், விருது வழங்குபவர் பற்றியும் சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது, அதாவது, உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது அமெரிக்காவில் வழங்கப்பட உள்ளதாக இருந்தாலும், இந்த விருதை வழங்குபவர் ஒரு தமிழர் என்பதுதான் அந்த சிறப்பு தகவல்.

சமுதாய ஆஸ்கர் விருது குறித்து, சமூக வலைதளங்களிலும், இணையதளத்திலும் தேடிப்பார்த்த பொழுது, மேலும் பல தகவல்களும் கிடைத்துள்ளது. இந்த விருதை கொடுப்பது VGP என்கிற DR. Vijay G Prabhakar என்ற அமெரிக்க வாழ் தமிழர் ஆவார். AMEC என்கிற அறக்கட்டளை மூலம் விருது கொடுக்கப்படுகிறது. இந்த விஜய பிரபாகர் தமிழகத்தின் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரபாகர் என்பவரின் மகன். அவர் தாத்தா பெயர் பிளிப், முன்னாள் சேலம் மாவட்ட துணை கலெக்டராக பதவி வகித்தவர்.

விஜய் பிரபாகர் மாமனார் பெயர் நியூட்டன் தேவசகாயம், அவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாவார். மேலும் இந்த விருது வழங்குவதற்கு ஜூரியாக செயல்பட்டவர்களில், Manne Lingaiahஎன்ற ஐ.ஐ.டி சென்னையின் முன்னாள் மாணவரும் இடம்பெற்றுள்ளார்.

இதன் அடிப்படையில் ஒரு தனியார் அமைப்பால் வழங்கப்படும் விருதை, உண்மையான ஆஸ்கர் அவார்டு போல சித்தரித்துக்கொண்டு, ஒரு கட்சி சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக நெட்டிசன்கள் ட்ரால்ஸ் மூலம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Views: - 2858

1

0