காங்., பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 9:55 am

காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!