நேரிடையாக களமிறங்கிய CM ஸ்டாலின்… கூட்டணி கட்சிகள் குஷியாக தேர்தல் பணி ; செல்வப்பெருந்தகை சொன்ன தகவல்

Author: Babu Lakshmanan
13 April 2024, 2:32 pm
selvaperunthagai - updatenews360
Quick Share

இந்த தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தான் நாயகன் என்று திமுக தலைவரை கூறிவிட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீப காலமாக 500 கோடி ரூபாய் மோசடி என்று செய்திகள் வந்துள்ளது. எதற்காக அமித்ஷா சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்பதை வெளியில் சொல்ல வேண்டும். பெரும்பாலான பாஜக வேட்பாளர்கள் பல பின்புலங்கள் கொண்டவர்களாகவும், குறிப்பாக மோசடி பேர்வழிகளாகவும் இருக்கின்றனர்.

தமிழகத்தில் புறந்தள்ளப்பட்ட கட்சியாக பாஜக உள்ளது. பாஜகவிற்கு வெறுப்பு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தியாவை அதானி என்ற பெரு நபரிடம் அடகு வைத்து விட்டார். இதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும். மிகப்பெரிய படிப்பினையை மோடிக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் தரவுள்ளனர். முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கும்.

பொதுமக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை சங்கடப்படுத்த மாட்டார்கள். ஓரிரு இடங்களில் ஏதாவது சம்பவங்கள் நடந்திருக்கலாம். அது நாங்கள் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக பார்க்கின்றோம். வெறுப்பு அரசியலை நாங்கள் கையில் எடுக்கவில்லை. பாஜக அதிமுகவுக்கும் என்ன உறவு என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவிற்கு வாக்களித்தாலும் ஒன்றுதான், அதிமுகவிற்கு வாக்களித்தாலும் ஒன்றுதான்.

விமர்சனம் எல்லாம் நாடகமே, கொள்ளபுறம் வழியாக அவர்களுக்குள் ஒரு உறவு உள்ளது. பாஜக எந்த அளவுக்கு வேண்டுமானால் செய்வார்கள். நாலு கோடி ரூபாய் பிடித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அமலாக்க துறையும், சிபிஐயோ வருமான வரித்தையோ இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இவைகள் எல்லாம் தூங்கிக் கொண்டு உள்ளனவா..? உத்தரவு மோடியிடமிருந்து வரவில்லையா..?

மேலும் படிக்க: 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை ; 20 பேரிடம் விசாரணை.. நாட்டையே உலுக்கிய சம்பவம்!!

மோடி மாடல் ஆட்சி என்பது ஜனநாயகத்தை சிதைக்க வேண்டும். வெறுப்பு அரசியலை வளர்க்க வேண்டும், பாசிசத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான். கூட்டணி கட்சிகளுக்கு திமுகவினர் அருமையாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர். தினமும் காலை கூட்டணி கட்சிகள், வேட்பாளர்களிடம் திமுக நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர் என்று கேட்டு அறிந்து வருகிறார்.

திமுக போட்டியிடும் தொகுதிகளை விட தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக திமுக தலைவர் கண்காணித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி வந்த பிறகு மிகப்பெரிய எழுச்சி தமிழகத்திற்கு வந்துள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் வேட்பாளர்கள் இரண்டு மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தான் நாயகன் என்று திமுக தலைவரை கூறிவிட்டார், எனக் கூறினார்.

Views: - 74

0

0