5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை ; 20 பேரிடம் விசாரணை.. நாட்டையே உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 1:56 pm
Quick Share

கோவாவில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கோவாவில் உள்ள வாஸ்கோவில் கட்டுமான தளத்தில் நேற்று காலை 5 வயது சிறுமி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார். உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க: ‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!

இதைத் தொடர்ந்து, சிறுமி யார் என்று தெரியாத நிலையில், உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் முடிவில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் (தெற்கு) சுனிதா சாவந்த் கூறினார்.

மேலும், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அதேசமயம், 20 பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Views: - 139

0

0