நீதிமன்ற கஸ்டடியை ரத்து செய்ய முடியாது.. செந்தில் பாலாஜி தரப்பு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி..!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 11:26 am
Quick Share

செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரியை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற கஸ்டடியை எதிர்த்து திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்க கோரிக்கை, 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களின் விசாரணை இன்று நடைபெறும் என்று நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். அதன்பேரில், முதலாவதாக, நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, ஏற்கனவே நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் மனு செல்லத்தக்கதல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Views: - 338

0

0