மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசு : டெல்டா மாவட்டங்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Author: Babu Lakshmanan
22 January 2022, 2:01 pm

சென்னை : மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத திமுக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததன் காரணமாக, டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதை சுட்டிக் காட்டியும், நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் தாலுக்கா அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது.

அதன்படி, டெல்டா மாவட்ட தாலுக்காக்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக,
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல, டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களின் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?