மாமூல் தராத பிரியாணி கடை அடித்து உடைத்து சேதம்… திமுக கவுன்சிலரின் கொழுந்தன் அடாவடி… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
30 March 2022, 11:26 am

சென்னை : பல்லாவரம் அருகே மாமூல் தராத கடைகளை அடித்து உடைத்த திமுக கவுன்சிலரின் கொழுந்தனும், திமுக நிர்வாகியுமான தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் 31வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருப்பவர் சித்ராதேவி. இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ்.

இவருடைய அண்ணி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனதில் இருந்தே, இவர் தனது ஸ்டெயிலை மாற்றிவிட்டார். அதாவது, ஒயிட் அன்ட் ஒயிட்டில் வலம் வருவது, ஏரியாக்களில் பஞ்சாயத்து செய்வது மற்றும் கடைகளில் மிரட்டி மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

மாமூல் வசூலிக்கும் போது பிரச்சனைகளை ஏற்படாமல் என்பதால், தனது தற்காப்புக்காக, சுகுமார் என்ற ரவுடி படையுடன் சென்று பணம் வசூலிப்பாராம். கேட்கும் பணத்தை தராவிட்டால், அந்தக் கடையை உடைத்து சேதப்படுத்துவது இவருடைய பாணி என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு பயந்தே ஒயின்ட் அன்ட் ஒயிட் தாதா தினேஷ் வரும் போதே, பணத்தை எடுத்து சில கடைக்காரர்கள் கொடுத்து விடுவார்களாம்.

இந்த நிலையில், சங்கர் நகர் பகுதியில் உள்ள கடையில் தினேஷ் மாமூல் கேட்டுள்ளார். ஆனால், அந்த வியாபாரி கொடுக்க மறுத்ததால், சாலையில் கிடந்த கற்களால் அடித்து கடையை சேதப்படுத்தியதோடு, கடையில் இருந்த பொருட்களை சாலையில் தூக்கி வீசி ரகளை செய்துள்ளார்.

திமுக நிர்வாகியின் இந்த அட்டகாசத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் வருவதற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்கள். பின்னர், அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன்பேரில் திருநீர்மலை பகுதியில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சுகுமார் மீது நிலுவையில் இருப்பதும், அவன் தொடர் கிரைம் குற்றவாளி எனவும் போலீசார் தெரிந்து கொண்டனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

அண்ணி திமுக கவுன்சிலர் என்பதால், கெட்ட ஆட்டம் போட்ட கொழுந்தனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே திருநீர்மலை பகுதி வியாபாரிகளின் கோரிக்கையாகும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!