கண்டெய்னரை தொடர்ந்து திமுகவினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் ஏன்டனா… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!!

20 April 2021, 2:16 pm
Dish - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 175 இடங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தை சுற்றி 3 ஷிப்ட்டுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதார, தேர்தல் விதிகளை மீறிய வை-பை வசதி, கண்டெய்னர்களின் வந்து செல்கிறது என அடுத்தடுத்து பல்வேறு புகார்களை திமுகவினர் முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சாலைகளில் செல்லும் கண்டெய்னர் லாரிகளையும் விடாமல் சோதனை செய்து வருகின்றனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

vote counting - updatenews360 (2)

இதன் ஒரு பகுதியாக, தஞ்சை, திருவையாறு மற்றும் ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேரூராவணி தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மாதிரி உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக வேட்பாளர்களான நீலமேகம், துரை சந்திரசேகரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கல்லூரியின் மேல் பொருத்தப்பட்டிருந்த டிஸ் ஏன்டனாக்களை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதன்பேரில், 5 டிஸ் ஏன்டனாக்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

anna arivalayam- updatenews360

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பழுதடைந்து இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுழல் முறையில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, கண்டெய்னர்களை கண்டு அச்சமடைந்து வரும் திமுகவினர், தற்போது ஏன்டனாக்களை கண்டாலும் பீதியடைவதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Views: - 136

0

0