பதவி விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம்…! மாநில தேர்தல் ஆணையம் புது உத்தரவு….!!

Author: kavin kumar
29 January 2022, 9:33 pm

சென்னை: ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26.01.2022 அன்று வெளியிட்டது. அதன்படி தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28.01.2022 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மேற்படி பதவியிடத்திற்கு தற்போது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் அல்லது கிராம ஊராட்சித் தலைவராகப் பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியினை உரியவாறு ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் தேர்வில்,

அவர் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கின்ற உறுதிமொழி ஆவணத்தில் அவரது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியினை ஆவணமாகக் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி அவர் தற்போது தொடர்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு, மேற்படி சட்டம், பிரிவு 41(1)-ன்படி, அவரை தற்போது அவர் வகிக்கும் பதவியில் தகுதிநீக்கம் செய்ய ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!