விஜயகாந்துக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை… வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை… மருத்துவமனையில் போலீசார் குவிப்பு..!!

Author: Babu Lakshmanan
28 December 2023, 8:26 am
Quick Share

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த்.
அரசியலில் நுழைந்து தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து, வந்த வேகத்திலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார். ஏழை மக்களுக்கு வாரி வழங்கும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார்.

இந்த நிலையில் அவ்வப்போது அவருக்கு மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்றார்.

பின்னர் பூரண குணமடைந்த பிறகு கடந்த டிசம்பர் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில் டிசம்பர் 14ல் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.

இந்த சூழலில், திடீரென நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மியாட் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் வருகை தருவார்கள் என்பதால் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 1327

0

0