திமுக அரசு எதுலயுமே வெளிப்படையாவே இல்ல.. ஆனா நாங்க விட மாட்டோம் : ஜிகே வாசன் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 ஜூலை 2024, 12:09 மணி
GK vasan
Quick Share

கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேசுகையில், ‘திருச்சியில் நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தொடர்பாக தென் மண்டலத்தை தொடர்ந்து, கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. இந்த மண்டலத்தில் இருந்து அதிக அளவில் பெரும் தலைவர் காமராஜர் விழாவை சிறப்பிக்க பங்கேற்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பெரும் தலைவர் காமராஜர் தின நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்துகொள்வது சிறப்பான ஒன்று.

தமிழகத்தின் விருதுநகரில் பட்டாசு ஆலைகள் வெடி விபத்தும், உயிரிழப்பும் தொடர் கதையாக உள்ளது. அரசு இதுபோன்று நிகழாமல் நடக்க பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தமாக சார்பில் பல போராட்டங்கள், ஆர்பாட்டம் நடக்தியுள்ளோம். ஆனால், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் விஷாசாராயம், கள்ளச்சாராயம் காரணத்தால் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக இது உள்ளது. ஒருபுறம் டாஸ்மாக், கள்ளச்சாராயம் என அனுமதித்து, இப்போது சராயகடைகளை மூடுவது சாத்தியமில்லை என கூறுவதை வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என கூறுகிறோம்.

இதுகுறித்து அமைச்சர் சபை நாகரிகம் இல்லாமல் பேசியுள்ளார். டாஸ்மாக் கடைகளை குறைக்கும் எண்ணமில்லை இல்லை என கூறுவதும், ஏழை எளிய மக்கள் இதில் சிக்கி உயிரிழப்பதும் வேதனையாக உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அபராதம், சிரையிலடைப்பு என அரசு சொல்வது, செயல் வடிவிலும் இருக்க வேண்டும். மேலும், இதன் பின்னணி யார் என சொல்லாமல், வெளிப்படையாக தெரிவிக்காமல் அரசு உள்ளது. இதில், சிபிஐ விசாரணை வைத்திருக்க வேண்டும். ஏன் சிபிஐக்கு அரசு பயப்படுகிறது.

முதல்வர் அங்கு வர கூட தயாராக இல்லை. பாஜக.மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய செயலாளர் அணில் ஆண்டனி ஆகியோரோடு நானும் சேர்ந்து எஸ்.சி கமிஷன் சேர்மேனை நேரடியாக சந்தித்து தகவல்களை கொடுத்துள்ளோம்.

நீட் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதற்காக, நீட் தேர்வே நடக்க கூடாது என்ற நோக்கில் இந்தி கூட்டணியை தூண்டிவிடுவது என்பது சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நடக்காது என்பது போல் உள்ளது.

நீட் தேர்வில் முறைகேடு நடைந்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர், இதை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதோடு, தவறுகள் நடக்காமல் இருக்க ஆலோசனை செய்து விதி வகுக்க உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு சவால் விடும் அளவிற்கு நமது மாணவர்கள் வளர்ந்து வரும் நிலையில் இதில் திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்கட்சிகள் கல்வியில் அரசியல் செய்து வருகின்றனர்.

நீட் தேர்வில் தேர்ச்சியில் நாம் வளர்ந்துவரும் சூழலில் இதில் அரசியலை புகுத்தி மாணவர்களை பெற்றோர்களையும் குழப்ப நிலைக்கு ஆளாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசே நடந்து கொண்டிருக்கிறது. போதை பொருள் நடமாட்டம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெட வைக்கிறது. இதை தடுக்காகத அரசு, எப்படி கள்ளச்சாரயத்தை ஒழிக்கும் என கேள்வி எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி விவகாரத்தில்
வெளிப்படததனையோடு திமுக அரசு செயல்பட வேண்டும்.

பூரண மதுவிலக்கிற்கு உண்டான ஆலோசனைகளை அரசு செய்ய வேண்டும். கண்மூடித்தனமாக டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக பேசுவது அரசுக்கு வாடிக்கையாகி வருகிறது.

கள்ளு கடைகளை திறக்க தாமக எதிர்கவில்லை. அதன் விதிகளில் தெளிவு இருக்க வேண்டும் என கூறுகிறோம். இதை செய்யாமல், டாஸ்மாக் திறந்தே தான் இருக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

செங்கோல், என்பது தமிழகத்தின் பண்டை கால அரசாட்சியின் நேர்மை, எளிமை, நீதி பிரலாமை, நேர்மையாக, ஞாயமாக, தர்மாமக ஆட்சி செய்வதன் எடுத்துக்காட்டுக்கு தான் செங்கோல். இந்தியாவில் இது தேவை. மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் இது தேவை என்பதை உணர்த்தவும், தமிழர்களின் பண்பாட்டை உயர்த்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவி பிரதமர் மோடி வரலாறு படைத்து சிறப்பித்தார். அதை கொச்சி படுத்தி

  • Nithyananda Ranjitha நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன்.. ரஞ்சிதா வெளியிட்ட பகீர் தகவல்!
  • Views: - 204

    0

    0