விமான நிலைய விரிவாக்கத்தில் பங்கு கேட்கும் திமுக.. மக்களுடன் சேர்ந்து போராடுவேன் : வானதி சீனிவாசன் வார்னிங்!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 1:17 pm
Vanathi Seeni
Quick Share

விமான நிலைய விரிவாக்கத்தில் பங்கு கேட்கும் திமுக.. மக்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போராடுவேன் : வானதி சீனிவாசன் வார்னிங்!

கோவை வெரட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎம்சி காலணி பகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றை பூஜை செய்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்:- சிஎம்சி காலனி பகுதியில் நீண்ட நாட்கள் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்ததாக கூறினார். பெரியார் நகர் பகுதியில் சாலையில் சரிவர இல்லை என்று கோவை மாநகராட்சி மீது குற்றம் சாட்டினர்.

கோவை மாநகராட்சி பகுதியில் என்னென்ன பணிகள் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.4 நாட்களுக்கு ஒரு முறை தான் குப்பையை மாநகராட்சி சார்பாக எடுக்கிறார்கள். அதனை தினமும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தினரில் மக்கள் பிரச்சினை பற்றி பேச உள்ளதாகவும் ஏற்கனவே பேசிய பிரச்சினைக்கு அமைச்சர்கள் தற்போது வரை தீர்வு கொடுக்கவில்லை என்று கூறினார்

மீண்டும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மக்களோடு இணைந்து திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக கூறினார்.

கோவை விமான நிலையத்தை திமுக அரசு விரிவாக்கம் செய்யாமல் காலத் தாழ்ந்து வருகிறது. விமான நிலையத்தை காலம் விரிவாக்கம் செய்தால் ஒரு லட்சத்துக்கு மேல் ஏற்பட்டிருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் விரிவாக்கம் செய்வதில் தனக்கு பங்கு வேண்டும் என்று திமுக கேட்டு வருவதாக கூறினார்.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கிறது.தமிழகத்திற்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை என்று கூறினார்.

மாநில அரசுகள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.மத்திய நிதியமைச்சர் இந்திய பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அதனை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக குற்றம் சுமத்தி வருகின்றனர்

தமிழகத்திற்கு அனைத்து மாநிலங்களவை விட அதிக அளவில் மத்திய அரசு நிதி வழங்கி வருவதாகவும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி வழங்கி வருவதாக கூறினார்.

திருப்பூர்,கோவை,ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வருவாய் தருகின்றது. வருவாய் தரும் மாவட்டங்களில் தரத்தில் தமிழக அரசு உயர்த்தாமல் மத்திய அரசு குறை சொல்லி வருகிறது.

உத்தரகாண்டில் தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தவும் என்று கூறிய நிலையில் தற்பொழுது அமல்படுத்தியுள்ளனர். அதை நான் வரவேற்கிறேன் என்றும் அது பெண்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும் என்று கூறினார்.

எங்கள் கட்சியை நாங்கள் வளர்க்கிறோம் அதற்கு மற்ற கட்சிகளை அழிக்கிறோம் என்று பொருள் கிடையாது.நாடு முழுவதும் நாங்கள் கட்சியை வளர்த்து வருகிறோம்.தனிப்பட்ட தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது.

பாஜக கூட்டணி இறுதியாகும் வரை தெளிவான முடிவுகள் இருக்கும் அதுவரை அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.யாரை வேண்டுமானாலும் பாஜகவில் சேர்த்துக் கொள்வோம்.வயதை காரணம் காட்டி யாரையும் விமர்சிக்க கூடாது குறை சொல்லக்கூடாது என்று கூறினார்.

கருத்துக்கணிப்பு என்பது ஒவ்வொரு சேனல் ஒவ்வொரு விதமாக கூறுவார்கள். இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியும். பாஜகவை புறக்கணிக்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் நடந்த பாஜக மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு முதல் தீர்மானத்தை பாஜக தான் அறிவித்தது என்றும் அவர்களுக்கு நியாயமாக குரலில் துணை நிற்கும் என்று கூறினார்.

மோடி மற்றும் பாஜகவை ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் சின்ன கட்சிகளாக இருந்தாலும் கூட்டணியில் இணைத்துக் கொள்ளுவோம். முதலில் மோடி எதிர்த்தவர்கள் தற்பொழுது மோடிக்கு ஆதரவாக இறங்கி வந்து கூட்டணியில் சேர்ந்து கொண்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில் 95% கிறிஸ்தவ மக்கள் மோடிக்கு ஆதரவு வருகின்றனர்.இந்திய மக்கள் மோடி ஆட்சி உணர்ந்து இருக்கிறார்கள். பாஜக தமிழகத்தில் பிரகாசமாக இருக்கிறது என்று கூறினர்.

Views: - 164

0

0