COPY, PASTE செய்து மத்திய அரசின் பெயரை மறைக்க பார்க்கும் திமுக : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 6:46 pm

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு தங்களது பெயரில் செயல்படுத்தி வருவதாக பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் சமூகம் அறியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சமூகம் அறியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் வடமாநில தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சாதி மத ரீதியிலான பாகுபாடு எங்கும் இருக்கக் கூடாது எனவும் நேரடியாக பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களை தான் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்த அவர், நாட்டில் உள்ள எந்த மக்களும் வேறுபாட்டின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை வாய்ப்பு வரும்போதெல்லாம் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் பாதிப்பு பெரியதாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் மத்திய அரசு மானியம் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு திட்டங்களும் செயல்படுத்தப்படுவதாகவும் ஆனால் மத்திய அரசின் திட்டங்கள் தான் என்று பெயர் வெளியே வராத வகையில் தமிழக அரசு அதனை தடுக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!