பொய்யை மட்டுமே பேசும் அண்ணாமலை… பெரியார் சிலை மீது கைவைத்தால் மத்தியில் ஆட்சி இருக்காது : RS பாரதி எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
8 November 2023, 12:40 pm

பொய் தேவையில்லாத கருத்துகளை தமிழ்நாட்டில் பரப்புவது தான் அண்ணாமலையின் வேலை என்றும், பெரியாரின் சிலை அகற்றப்பட்டால் மத்தியில் இருந்து பாஜக அகற்றப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

நீட் ஒழிப்பு கையெழுத்து நிகழ்வானது வடசென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் இன்று நடத்தப்பட்டது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிராக தனது கையெழுத்தை பதிவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- அண்ணாமலை பொய் சொல்வது, தேவை இல்லாத கருத்தை தமிழ்நாட்டில் பேசுவது அவரது தொழில். பெரியார் கல்வெட்டை அகற்றினால் இவர்கள் மத்தியில் இருந்து அகற்றபடுவார்கள் என்பது உறுதி. பெரியாரின் கருத்துகள் உலகம் முழுதும் பேசும் நிலையில், இந்த கருத்தை அழிப்பவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள்.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றோரே பெரியாரின் கருத்துகளை பிரச்சாரத்தில் மேற்கொள்கிறார்கள். சிங்கப்பூரில் பேசிய மயில்சாமி அண்ணாதுரையும், பெரியார் தான் சந்திர மண்டலத்தில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை உணர்த்தியவர் என்றும், அறிவூட்டியர் பெரியார் என்றும் பேசினார்.

மயில்சாமி அண்ணாதுரை விஞ்ஞானி பேசிவிட்டபோது, அண்ணாமலைக்கெல்லாம் இதை தான் சொல்ல விரும்புகிறேன். பெரியார் சிலையை எடுத்துவிட்டு திருவள்ளுவர் சிலை வைப்போம் என அண்ணாமலை பேசியது தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புவது. முதன்முதலில் வள்ளுவருக்கும், பெரியாருக்கும் சிலை வைத்தது நாங்கள் தான்.

எங்கெல்லாம் பெரியார் சிலை உள்ளதோ, அங்கெல்லாம் வள்ளுவர் சிலையும், எங்கெல்லாம் வள்ளுவர் சிலை உள்ளதோ அங்கெல்லாம் பெரியார் சிலையும் நாங்கள் வைப்போம். மே மாதத்திற்கு பிறகு ஆட்சியில் இருந்து பாஜக வெளியேற போகிறது. இந்தியா கூட்டணி தான். மேலும், நாகலாந்து மக்கள் குறித்த தமது கருத்தில் பேனை பெருமாளாக ஆக்கி, அதை பிரச்சனையாக்குவது என்று ஆளுநர் ரவியும், பாஜகவும் நினைக்கின்றது. அந்த மாநில மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

நீட்தேர்வு ரத்து கையெழுத்து இலக்கு என்பது அரசியல் நாடகம் என சீமான் கூறிய கருத்து குறித்து பேசிய பாரதி, சீமான் ஒருநாள் எங்களை ஆதரிப்பார், ஒருநாள் எதிர்ப்பார் என பேசினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!