கைகட்டி வேலை பார்த்த இந்த ஆட்டுக்குட்டி… இப்ப ரொம்ப துள்ளுது ; அண்ணாமலையை விமர்சித்த திமுகவின் ஆர்எஸ் பாரதி..!!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 11:27 am
Quick Share

தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ள பிரதமர் மோடி, இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும், அந்த அளவுக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியின் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் பிரகாசமாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப்பெரிய வளர்ச்சி கூட்டணி ஆதரவு பெற்றிருப்பதால் அதைக் கண்டு மோடிக்கு ஜுரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: சாலையின் குறுக்கே மறுக்கே ஓடிய சிறுத்தை… அதிர்ந்து போன மக்கள்…களத்தில் இறங்கிய வனத்துறையினர்..!!!

உத்திர பிரதேசத்தில் ராகுலும், அகிலேஷ் யாதவும் நடைபயணம் ஒன்றிணைந்து சென்றதால், இந்த முறை நிச்சயம் 60 நாடாளுமன்ற தொகுதியை இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது என்றும், பீகாரிலும் 35 இடங்களில் இந்தியா கூட்டணி 33 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும் மட்டுமே வெல்ல முடியும் என்றும், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அங்கேயும் இந்தியா கூட்டணி வெள்ள வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆக மொத்தம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறை 150லிருந்து 160 இடங்கள் மட்டும்தான் வெல்ல முடியும் என்றும், உலக நாடான அமெரிக்கா 2016ல் மோடி ஆட்சி வரப்போகிறது என்று கூறியது. ஆனால் தற்போது மோடி ஒழிய வேண்டும் என சொல்கிறது என்றால், இந்த முறை மோடி ஆட்சி நிறுத்தப்பட்டு தான் காங்கிரஸ் ஆட்சி வருவது உறுதி, என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: Gold and Silver rate ; புதிய உச்சத்தில் தங்கம் விலை… ரூ.52 ஆயிரத்தை எட்டி விற்பனை ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

இந்தியா கூட்டணியின் திருவள்ளுவர் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வெற்றியை பெற்று அமைச்சர் ஆகுவது உறுதி. இன்று ரொம்ப துள்ளும் ஆட்டுக்குட்டி அன்று கர்நாடகாவில் இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு தான் வேலை செய்தது என்றும், கைகட்டி வேலை பார்த்த இந்த ஆட்டுக்குட்டிக்கு இவ்வளவு ஆட்டுமா..? என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.

Views: - 95

0

0