48 மணி நேரத்தில் திமுகவின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹெச். ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 10:22 am
H Raja - Updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுக அரசுக்கும்- ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆளுநருக்கு எதிராக புகார் தெரிவித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

மேலும் அந்த கடிதத்தில் ஆளுநர் பதவிக்கே தகுதியில்லாதவர் எனவும் கடுமையாக விமர்சனர் செய்தார். இந்தநிலையில் 6 நாட்கள் பயணமாக டெல்லி சென்றிருந்த ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை அமைச்சக அதிகாரிகள், சட்டத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் பாஜக ஆட்சியை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லையென முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே 6 நாட்கள் பயணத்தை முடித்து விட்டு ஆளுநர் ரவி நேற்று சென்னை திரும்பியுள்ளார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான்.

செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? என எச்.ராஜா கூறியிருந்தார்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 430

    0

    1