திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரார்த்தனை : சந்திராயன் 3 வெற்றியடைய வேண்டி சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 11:17 am
ISRO - Updatenews360
Quick Share

சந்திராயன்-3 விண்கலம் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பப்படவுள்ள இந்த சந்திராயன்-3 விண்கலம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3900 கிலோ எடை கொண்ட சந்திராயன்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதிகட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், நாளை செலுத்தப்பட உள்ள சந்திராயன்-3 விண்கலம் வெற்றியடைய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சந்திராயன்-3 விண்கலத்தின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து, இந்த ஏவுதல் வெற்றியடைய வேண்டி வழிபாடு செய்துள்ளனர். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நிலவில் விண்கலம் தரையிறக்கும் 4-வது நாடு நமது இந்தியா ஆகும். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 268

0

0