திமுக அவதூறு பரப்பும் போது சொல்லும் ஒரே பதில்… அமைச்சர் டிஆர்பி ராஜாவின் குட்டுகளை ட்வீட் போட்ட அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 7:00 pm
TRB Raja
Quick Share

திமுக அவதூறு பரப்பும் போது சொல்லும் ஒரே பதில்… அமைச்சர் டிஆர்பி ராஜாவின் குட்டுகளை ட்வீட் போட்ட அண்ணாமலை!!

உத்தர பிரதேசம், பீகாரில் இருந்து தமிழகத்துக்கு வரும் இந்தி பேசும் தொழிலாளர்கள் இங்கே சாலை அமைக்கும் பணிகள், கட்டுமான பணிகள், கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளைத்தான் செய்கிறார்கள் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து திமுக எம்.பி தயாநிதி மாறனின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷ்சத் பூனாவாலா வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் ஒரு பிரித்தாளும் முயற்சி நடந்துள்ளது. முதலில் ராகுல் காந்தி வட இந்திய வாக்காளர்களை அவமதித்தார். பின்னர் ரேவந்த் ரெட்டி பீகார் டிஎன்ஏவை அவமதித்தார். பின்னர் திமுக எம்.பி செந்தில் குமார் கோமூத்ரா மாநிலங்கள் என்று பேசினார். இப்போது தயாநிதிமாறன் இந்தி பேசுபவர்களை அவதூறாக பேசியுள்ளார். இந்துக்களை, சனாதனத்தை அவமதிப்பது, பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்வது இந்தியா கூட்டணியின் டிஎன்ஏவிலேயே உள்ளது. நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் கட்சி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எதுவும் நடக்காதது போல இருக்கப் போகிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார். திமுக எம்பி தயாநிதி யின் பேச்சுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக கருணாநிதி தலைவராக இருந்த கட்சி. சமூக நீதியில் நம்பிக்கையுள்ள கட்சி திமுக. திமுக தலைவர்கள் யாராவது பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில மக்களைப் பற்றி ஏதாவது பேசியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அதில் எங்களுக்கு உடன்பாடும் கிடையாது. பீகார் மக்களாகிய நாங்கள் பிற பகுதிகளில் உள்ள மக்களை மதிக்கிறோம். நாங்களும் அதையே எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “உத்தர பிரதேசம் & பீகாரில் உள்ள நமது நண்பர்களை திமுக எம்.பி அவதூறாகப் பேசிய இந்த வீடியோவுக்கு திமுக தரப்பில் இருந்து வரும் ஒரே பதில் இந்த வீடியோ பழையது என்பதுதான்.

பிரித்தாளும் கொள்கையில் கட்டமைக்கப்பட்ட கட்சியான திமுக, இன்றும் இத்தகைய மொழியைப் பயன்படுத்தும்போது, அது எப்படி மாறும்? சமீபத்தில், நாடாளுமன்ற அரங்கில், வட மாநிலங்கள் கோமுத்ரா ஸ்டேட்ஸ் என்று, திமுக எம்.பி பேசினார். திமுகவில் என்ன மாற்றம் நடந்துள்ளது?

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்றும் இந்த மொழியைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த துஷ்பிரயோகம் செய்பவர்கள் தங்களை வழிநடத்தும் ஒரு அமைச்சரால் ஊக்குவிக்கப்படுகிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அதோடு, உத்தர பிரதேசம், பீகார் மாநிலத்தவர்களைப் பற்றியும், அவர்களின் கல்வி அறிவைப் பற்றியும் விமர்சிக்கும் வகையில், தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா, முன்பு பதிவிட்ட ட்வீட்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் இணைத்துள்ளார் அண்ணாமலை.

Views: - 326

0

0