திமுக அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? வெளியான பட்டியல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 9:52 pm
Minister Udhayanithi List- Updatenews360
Quick Share

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படுகிறது.

அமைச்சரவையில், உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. கடந்த 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56-வது வயதில் அமைச்சரவையில் இடமளித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தன் 46-வது வயதில் அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் திமுகவில் சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உதயநிதிக்கு கொடுத்த இடம் மூத்த அமைச்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் முதல், அமைச்சர் மெய்யநாதன் வரை பட்டியல் இருந்தாலும், தற்போது பதவியேற்ற உதயநிதிக்கு 10வது இடத்தை அளித்துள்ளனர்.

முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, பெரியசாமி, பொன்முடி, எவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், கேகேஎஸ்எஸ்ஆர்இ தங்கம் தென்னரசை தொடர்ந்து 10வது இடத்தில் உதயநிதி உள்ளார்.

அவரைத் தொடர்ந்து மீதமுள்ள அமைச்சர்கள் உள்ளனர். அதில் அமைச்சர்கள் சக்கரபாணி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ரகுபதி, முத்தரசன், பெரியகருப்பன், சாமிநாதன் போன்ற மூத்த அமைச்சர்கள் பெயர் பின்னால் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 171

0

0