இல்லந்தோறும் மூவர்ணம்… வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய இபிஎஸ்… ரஜினி இல்லத்தில் பறக்கும் மூவர்ணக்கொடி..!!
Author: Babu Lakshmanan13 August 2022, 11:12 am
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வீட்டில் தேசிய கொடியேற்றினார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் மத்திய அரசு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பட செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு அறிவிப்புகளும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ந் தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனையேற்று பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் இன்று தேசியக் கொடி ஏற்றினார்.
அதேபோல, தமிழக நடிகர்களில் தேசப்பற்று மிக்கவராக காட்டிக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது வீட்டின் முன்பு தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லாலும் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி, சல்யூட் அடித்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0
0