இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் : போலீசார் தீவிர விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2022, 12:57 pm
இலங்கையில் இருந்து அகதிகளாக நான்கு பேர் ராமேஸ்வரம் வந்து இறங்கி உள்ளனர் அவர்களை மண்டபம் மொரேன் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன
இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் இலங்கை திருகோணமலை சல்லி இரண்டாம் வட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படகு மூலம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு வந்து இறங்கி உள்ளனர்.
வந்து இறங்கிய அகதிகள் நான்கு பேரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் பதிவில் இருந்தவர்கள் என்பதால் இவர்கள் நேரடியாக மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அகதிகளாக வந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்
அவர்களிடம் மாரேன் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் பொழுது இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஜெயமாலினி, பதுர்ஜன், ஹாசிம் கான்,பாதுஷிகா, என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என தெரிய வந்துள்ளது
இதுவரை இலங்கையில் இருந்து 134 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில் இன்று வந்தவர்களிடம் மத்திய மாநில உறவு துறையினர் கியூ பிரிவு போலீசார் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
0
0