அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் : எம்ஜிஆருக்கு எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி..!!

Author: Babu Lakshmanan
17 January 2022, 11:24 am
Quick Share

சென்னை : எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவினரின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கொண்டாட அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் “அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர், சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து, கோடிக் கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் புரட்சித்தலைவருக்கு 105 வது பிறந்தநாள் புகழ் வணக்கங்கள்,” என்று கூறியுள்ளார்.

இதேபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த வாழ்த்து செய்தியில், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் வழியில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து “மீண்டும் அஇஅதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம்” என இந்நாளில் உறுதியேற்போம்!,” என தெரிவித்துள்ளார்.

Views: - 272

0

0