சென்னையில் தானாக வடிந்த மழைநீர்… தாங்களே அகற்றிவிட்டதாக நாடகமாடும் திமுக அரசு… இன்றைக்கும் சென்னையில் படகு ஓடிக்கிட்டு தான் இருக்கு ; எடப்பாடி பழனிசாமி

Author: Babu Lakshmanan
14 November 2022, 2:18 pm

சென்னையில் தானாக வடிந்த தண்ணீரை, தாங்களே அகற்றிவிட்டதாக திமுக நாடகமாடுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

edappadi palanisamy  - updatenews360

அதேபோல, அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசும், மீட்பு பணிகளில் ஈடுபட்டாலும், பல இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.மழை வெள்ளத்தை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

edappadi palanisamy  - updatenews360

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை, சென்னையில் பெரியளவில் கனமழை பெய்யவில்லை ; மிதமான அளவில்தான் மழை பெய்துள்ளது. சென்னை பெருநகரில் 7 செ.மீ. வரையில் மழை பெய்தால் அது தானாக வடிந்துவிடும். ஆனால், தற்போது மழைநீரை அகற்றி விட்டோம் என்கிறார்கள்.

edappadi palanisamy  - updatenews360

அதிமுக ஆட்சியில் படகில் வந்தார்கள் என்றார்கள். ஆனால், இன்று படகுகளில் மீட்கப்படும் காட்சியை நீங்களே பார்க்கிறீர்கள். சென்னையில் ஆங்காங்கே குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது ; மழைநீர் வடிந்துவிட்டதாக ஆளும் தரப்பில் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

மழை, வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் நேரில் வழங்கப்படவில்லை ; பெரும்பாலான இடங்களில் மருத்துவ முகாம்கள் கூட ஏற்படுத்தப்படவில்லை, எனக் கூறினார்.

  • manikandan rajesh sobhithaseparation சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!
  • Views: - 460

    0

    0