‘தேநீர் கடையில் ஆரம்பித்து தேசத்தின்’.. டீக்கடை நடத்தும் நிர்வாகிக்கு அன்பு கட்டளையிட்ட அண்ணாமலை..!!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 11:54 am

விருதுநகரில் நடைபயணத்தின் போது தேநீர் அருந்திய அண்ணாமலை, அதற்கான பணத்தை பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

விருதுநகரில் நேற்று ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்ளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தின் போது, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சுவாமி ஜி டீக்கடையில் தேநீர் அருந்த உள்ளே சென்றார்.

தேநீர் அருந்திய அவர், தேநீருக்காண பணத்தை கையில் கொடுக்காமல் பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

பின்னர், தேநீர் கடை உரிமையாளரிடம் கலந்துரையாடிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய அளவு புகைப்படத்தை வைத்து அதற்கு கீழ் “தேநீர் கடையிலிருந்து ஆரம்பித்து இன்று தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி” எனும் வாசகத்தை எழுதி வைக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார். இந்த மாற்றம் உங்களது கடையிலிருந்து முதன் முதலாக தொடங்கட்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதனிடையே, தேநீர் அருந்தியதற்கான தொகையை விட கூடுதலாக பத்திரிக்கையாளர்கள் தேநீர் அருந்துவதற்கும் பணத்தை செலுத்துவதாக அண்ணாமலை கூறியது, அங்கு கலகலப்பை உண்டாக்கியது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!