இனி ஆண்டுதோறும் சொத்துவரி உயர்வு.. அமைச்சர் கேஎன் நேருவின் அறிவிப்பும்… சொன்ன காரணமும்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Author: Babu Lakshmanan
13 May 2022, 12:35 pm

சென்னை : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி உயர்த்துவது சரியாகாது என்று அமைச்சர் கேஎன் நேரு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஎன் நேரு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பணி நிரவல் காரணமாக தமிழகத்தில் புதிய சொத்து வரி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக, வரியை உயர்த்தவோ, வரி மேல்முறையீடவோ மக்களால் தேர்ந்தெடுக்கட்டவர்களே முடிவு செய்ய இந்த சட்டம் வழிவகுக்கிறது.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டுதோறும், சாலை அமைத்தல், கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால், விளையாட்டு மைதானம் போன்ற புதிய பணிகளைசெய்ய வேண்டி உள்ளது.

இனி 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்த்துவது ஏற்புடையதாக இருக்காது. எனவே, அந்தந்த பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆண்டுதோறும் வரி நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வு மக்கள் பணி செய்வதற்காகத்தான். இதனால் விலை வாசி உயர்வு எல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை.

அரசு ஒதுக்கும் நிதியைவிட நகராட்சி நிர்வாகமே தங்களுடைய சொந்த செலவில் மக்கள் நலப் பணித் திட்டங்களை செய்யதான் வரி உயர்வு. இதனால் விலைவாசி அதிகரிக்கவில்லை. இந்தியாவிலேயே சொத்து வரி மிக குறைவாக உள்ள மாநிலம் தமிழகம்தான், எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!