படியில் தொங்கியதை கண்டித்ததால் ஆத்திரம்.. ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்கள்.. பேருந்துகளை இயக்காமல் போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 11:33 am
Quick Share

விருதுநகர் : விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களை கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே பேய்க்குளம் கிராமத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தை ஜெயராம் என்ற ஓட்டுனர் இயக்கி உள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் படியில் பயணம் செய்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, பழைய பேருந்து நிலையம் வந்தவுடன் ஓட்டுநர் படியில் தொங்கிய மாணவர்களை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த ஓட்டுனர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதை கண்ட அருகில் இருந்த பெரிய கருப்பன் என்ற மற்றொரு ஓட்டுநர் மாணவர்களை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த மாணவர்கள் பெரிய கருப்பனையும் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த 2 ஓட்டுநர்களும் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே பேருந்துகளை இயக்குவோம் எனக் கூறி பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 635

0

0