ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு… திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 4:45 pm
Quick Share

அமைச்சர்கள் சர்ச்சை

திமுக அரசின் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், போன்றோர் வெளிப்படையாக பேசுவதாக நினைத்து தெரிவிக்கும் கருத்துக்கள் சில நேரங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியும் விடுகிறது.

அதுவும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு சர்ச்சைக்குரிய விதமாக இவர்கள் பேசுவது வாடிக்கையான ஒன்றாகவும் உள்ளது.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

இது யாருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறதோ, இல்லையோ, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை உருவாக்குவதாக மாறி விடுவதும் கண்கூடு.

ஆனால் இது பெரும்பாலும் சமூக ஊடகங்களில் மட்டுமே பரபரப்பாகப் விவாதிக்கப் படுகிற விஷயமாக இருப்பதால் சாமானிய மக்களிடம் பெரிதாக தாக்கம் எதையும் ஏற்படுத்தி விடாது என்று கருதியோ, என்னவோ இதற்கு ஸ்டாலின் எந்த பதிலும் தெரிவிப்பதில்லை. அல்லது இதை கண்டுகொள்வது கிடையாது.

மாறாக திமுகவின் ஐடி விங்கும், திமுக ஆதரவு ஊடகவியலாளர்களும்தான் எதிர்வினையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்துக்கள் குறித்து அவதூறு

இந்த நிலையில்தான் அண்மையில் திமுக எம்பி ஆ ராசா, இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட செய்தி, இந்துக்களிடமும், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி தலைவர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத விரோதத்தை தூண்டும் விதமாக பேசிய ராசாவை உடனே கைது செய்யவேண்டும் என்று அவர்களால் வலியுறுத்தவும் படுகிறது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

அதிமுக கேள்வி

தற்போது இந்த விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்து திமுக அரசை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து இருக்கிறார்.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

அண்ணாவின் 114-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் பேசிய அவர், ஆ ராசா, இந்துக்கள் பற்றி அவதூறாக தெரிவித்த கருத்து முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் பொருந்துமா?… என்று ஒரு கிடுக்குப்பிடி கேள்வியை எழுப்பினார். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சபரீசன், யாகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நழுவிய அமைச்சர்

இதற்கிடையே ஆ ராசா இந்துக்களை விமர்சித்தது பற்றி, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு அவர், காது கேட்கவில்லை என்பது போல் சைகை செய்துவிட்டு, அங்கிருந்து சென்றதும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆ ராசா பற்றி கருத்து சொல்ல சேகர்பாபு ஏன் தயங்குகிறார்?…இதை அவருடைய பயமாக எடுத்துக்கொள்ளலாமா?… என்ற கேள்விகள் பலராலும் கேலியாக எழுப்பப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவில் 90 சதவீத இந்துக்கள் உள்ளனர் என்று அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து திமுகவுக்கு எதிர்வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயந்தோ, என்னவோ நான் மனுஸ்மிருதியில் இருப்பதைத்தான் மேற்கோள்காட்டி பேசினேன் என்று ஆ ராசா இப்போது ‘யூ டேர்ன்’ அடித்து இருக்கிறார்.

ஆனால் யாரோ எந்தக் காலத்திலோ எழுதிய, தற்போது நடைமுறையிலேயே இல்லாத மனுஸ்மிருதி பற்றி, அதுவும் அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் மட்டுமே நாட்டில் அமலில் உள்ள நிலையில் ஆ ராசா எம்பி பேசியது மத துவேசம் கொண்டது என்ற குற்றச்சாட்டு இந்து மத அமைப்புகளால் முன் வைக்கப்படுகிறது.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

இப்படி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், திமுக அரசின் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவும் சர்ச்சையில் சிக்கி இருப்பது தமிழக அரசியலில் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

ஊழல் குண்டு

இந்த நிலையில்தான் திமுக முன்னாள் அமைச்சர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமியின் கணவர் A.B. ஜெகதீசன், திமுக ஆட்சியின் அவலம் குறித்து, தனது முகநூல் பக்கத்தில், அடுத்தடுத்து சர வெடிகளை கொளுத்தி போட்டுள்ளார். அவை அணு குண்டு போல வெடித்து சிதறி இருக்கிறது. இது திமுகவினரிடையே பலத்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 11-ம் தேதி சென்னையில், ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப் படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு, வைகோவை புகழ்ந்து தள்ளினார்.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

இதனால் கொந்தளித்த ஜெகதீசன் தன் முக நூல் பக்கத்தில், “1993-ல் திமுகவிலிருந்து கருணாநிதியையே வெளியேற்றி விட்டு திமுகவை கைப்பற்றும், உருவாக்கும் முயற்சியில் பணக்காரப் பயல்களோடு சேர்ந்து கொண்டு கோபாலசாமி கொக்கரித்த காலத்தில் கருணாநிதி பட்ட பாட்டை, மன உளைச்சலை, உற்ற வேதனையை அருகிலிருந்து கண்டவர்கள் நாங்கள்! அந்த நிகழ்வுகள் 30 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் எங்களுக்கு!

பேசிய பேச்சுக்கள், ஏசிய வசவுகள், சீண்டிய கிண்டல்கள், செய்த அவமதிப்புக்கள், ஏகடியங்கள் கணக்கில் அடங்காதவை! ஆட்சியில் அமர்ந்துள்ளோருக்கு அது மறந்திருக்கலாம். அவர் தம் அணுகுமுறை வேறு. நாங்கள் ஏற்பதற்கில்லை.
துரோகத்தை எதிர்த்து அன்று கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர்கள் நிலை என்ன ராஜா?…

2016ல் நால்வர் அணிக்கு தலைமை ஏற்ற வைகோ பேசிய, ஏசிய உரைகள் ஞாபகம் வரவில்லையா… வெட்கம், மானம், ரோஷம், மரியாதை, சூடு, சொரணை எமக்குள்ளதே; என்ன செய்ய உடன் பிறப்பே?… அதை உணராமல், விமர்சிக்கும் என்னை திட்ட வெட்கமாக இல்லையா உமக்கு?…

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

லஞ்சம் இல்லாத தமிழக அரசின் ஒரு துறையை சொன்னால், ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கலாம்; இயலுமா என் தோழா?…என்று திமுக அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எதிராக பல்வேறு விமர்சனங்களை ஜெகதீசன் காட்டமாக பதிவிட்டு உள்ளார்.

சர்ச்சையான திருமணம்

தவிர மதுரையில் நடந்த தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழா நிகழ்வை விமர்சித்து “அழிவின் விளிம்பை நோக்கி…” என்ற தலைப்பில் ஒருவர் எழுதிய கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்.

அதில், “ஜெ. வீட்டு வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை போல மதுரையில்
பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

பல பத்து கோடிகள் செலவில் திருமணம் நடந்ததை தொலைக்காட்சிகள் காட்டின. பல்லாயிரம் ஆடுகளை வெட்டி, கோழிகளை அடித்து போட்டு, பணம் எண்ணும் மிஷினில் பணத்தை எண்ணுவதை பார்த்தால் மக்கள் என்ன நினைப்பர்?…

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

மெஷின்களை வரிசையாக வைத்து மொய் வசூல் செய்து நடத்துகிற திருமணம் எல்லாம் திராவிட மாடலா..? இந்தத் திருமணத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டு இது ‘பிரம்மாண்டம்’ என்று புகழ்வதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று அதில் கூறப்படுள்ளது.

மின்கட்டண உயர்வு

அதுபோல் மின்சார கட்டண உயர்வு குறித்து அவர் தனது பதிவில், “வாங்கிய பணத்தை செலவிட முடியாமல் திணறும் எங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்திய முதலமைச்சருக்கு நன்றி!” என கிண்டலடித்து இருக்கிறார்.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

முகநூலில் தன்னை பற்றிய சுய குறிப்பில் போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதொரு கருத்தை சரி என்றால் பதிவிடுவேன் என குறிப்பிட்டுள்ளார், ஜெகதீசன்.

திமுகவுக்கு தலைவலி

“திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் திமுக அரசின் மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் ஒரே நேரத்தில் வைத்துள்ள விமர்சனங்கள் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“கருணாநிதியின் தீவிர விசுவாசி என்று கூறப்படும் ஜெகதீசன் சமீபகாலமாக சொந்த கட்சியையே கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது 50 ஆண்டு காலமாக அரசியலில் உள்ள சுப்புலட்சுமிக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தியுள்ளது.

1972ல் தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, 1977 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய எம்ஜிஆர், அவர் வெற்றி பெற்றதும் ஜவுளித் துறை அமைச்சராகவும் நியமித்து எதிர்காலத்தை ஒளிமயமாக்கினார். ஆனால் 1980ல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டபோது அவர் எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கினார்.

திமுகவில் சேர்ந்த பிறகு எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் வெற்றி பெற்று தன்னை கட்சியில் வலுப்படுத்தியும் கொண்டார்.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி வெற்றி பெற்றால் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவாலய வட்டாரத்தில் பேச்சு இருந்தது.

ஆனால் 281 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் டாக்டர் சரஸ்வதியிடம் அவர் அதிர்ச்சி தோல்வி கண்டார். தொகுதியில் செல்வாக்கு பெற்ற தனது மனைவியை திட்டமிட்டு திமுக நிர்வாகிகள் சிலர் தோற்கடித்து விட்டதாக ஜெகதீசன் கருதுகிறார். அதன் பிறகு மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் ஆவலோடு எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதுதான் அவருடைய கொந்தளிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறும் திமுகவினர் கட்சித் தலைமைக்கு கண்டனக் கணைகளை குவித்தும் வருகின்றனர். திமுகவினரே திமுகவை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுப்புலட்சுமியோ தனது கணவரின் அதிரடி நடவடிக்கையால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்.

ஊழல் இல்லாத துறையை காட்டினால் ரூ.1 கோடி பரிசு... திமுக முன்னாள் அமைச்சரின் கணவரால் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!!

அதேநேரம் அவருடைய கணவர் ஜெகதீசன் தனது மனக்குமுறலை கட்சியின் நலன் கருதியே கொட்டித் தீர்த்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏற்கனவே அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு பொன்முடி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், சேகர்பாபு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா ஆகியோரின் சர்ச்சை பேச்சுகளால் எழுந்துள்ள சிக்கல்களுக்கு வெளிப்படையாக எந்த பதிலும் தெரிவிக்க முடியாமல் தவிக்கும் திமுக தலைமை மொடக்குறிச்சி சுப்புலட்சுமியின் கணவர் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 464

0

0