‘ஊருக்கு நல்லது செய்வதாக இருந்தால்’… அண்ணாமலையிடம் உரத்த குரலில் கோரிக்கை வைத்த பெண் தொழிலாளர்கள்..!

Author: Babu Lakshmanan
17 August 2023, 1:06 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சூழ்ந்து கொண்ட முந்திரி தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்கள் உரத்த குரலில் கோரிக்கையை முன்வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் பகுதியில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ 18வது நாள் பிரச்சார நடைபயணத்தை தொடங்கினார். நடைபயணம் கல்லுவிளை என்ற பகுதியில் வரும் போது, அங்கு இயங்கி வரும் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் அண்ணாமலையைக் காண தொழிற்சாலை முன் குவிந்தனர்.

அவர்களை கண்டு நின்ற அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பெண் தொழிலாளிகள் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது, “ஊருக்கு நல்லது செய்வதாக இருந்தால் பிராந்தி கடைகளை அடையுங்கள். மக்கள் நிம்மதியாக இல்லை. வேலை செய்ய முடியல, சாப்பிட முடியல,” என உரத்த குரலில் கோரிக்கையை முன் வைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!