CM ஸ்டாலின் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமர்… வாயிலேயே வடை சுடும் பிரதமர் மோடி ; திண்டுக்கல் லியோனி பரபர பேச்சு!!

Author: Babu Lakshmanan
17 August 2023, 12:06 pm
Quick Share

ஹரியானா பிரச்சனைகளை பற்றி எல்லாம் பதில் கூறாமல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையை பற்றி பேசி வருவதாக திமுக நிர்வாகி திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவானது தமிழகம் முழுவதும் திமுகவினரால் தொடர்ந்து நலத்திட்டங்கள் வாயிலாகவும், விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வடசென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில் நலத்திட்ட உதவிகளாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மேடையேறி பேசினார். அவர் பேசியதாவது :- அமைச்சர், சபாநாயகர் பதவியில் இருந்தவர் ஜெயக்குமார் ,1989 இல் நடந்தது தற்போது தொலைக்காட்சிகளில் விவாதம் ஆகியுள்ளது. இறந்தவர்கள் தெய்வத்திற்கு சமம். இறந்த ஜெயலலிதாவிற்கு நானுமே இரங்கல் தெரிவித்துள்ளேன். தற்போது விவாதங்களாக மாறியுள்ள இந்த விஷயங்கள் தற்போது பேசி பொருளாக மாறியுள்ளது நிர்மலா சீதாராமனால் தான்.

எதிர்கட்சி கூட்டணி கூட்டத்திற்கு சென்றுவிட்டு, அத்தனை எதிர்கட்சி தலைவர்கள் இருக்கும்போது, கர்நாடக முதல்வரிடம் தண்ணீர் கேட்பது சரியல்ல. கொத்தடிமை என்பதற்கு பொருத்தமானவர்கள் அதிமுகவினர் தான். ஜெயலலிதா, சசிகலா, தினகரன் தற்போது பிரதமர் மோடி உட்பட அனைவருக்கும் அடிமையாக இருந்தது அதிமுகவினர் தான். ஜால்ரா அடித்து ஆமாம் போடுகின்றனர். தன்மானத்திற்கு ஒரே இலக்கணம் திமுக கட்சி.

இரவு நேரங்களில் கூட, மழையிலும் உணவு டெலிவரி செய்து மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் சுவிக்கி, ஸ்மேட்டோ ஊழியர்களுக்கு வாரியம் அமைத்த ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் என சுதந்திர தினத்தில் அறிவித்தவர் முதல்வர், எனக் கூறினார்.

ஒரு ஆண்டில் ஒரு கோடி பெண்களை நாட்டில் லட்சாதிபதியாக ஆக்குவேன் என்று கலர் கலராக ரவை இல்லாமல் உப்புமா கிண்டுவதாக இந்தி பாடல்களை பேசி நக்கலடித்தார்.

தொடர்ந்து, பேசிய அவர், பிரதமர் வாயிலேயே வடை சுடுவது வடஇந்தியாவில் வேண்டுமானாலும் நடைபெறலாம். பெரியார் மண்ணான தமிழகத்தில் அவையெல்லாம் எடுபடாது. அதிமுக இயக்க தலைவரான எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் இசை அமைத்த டிஎம்எஸ் சௌந்தரராஜன் குடும்பத்திற்கு எந்த நிதிஉதவியும், எந்தவித உதவியும் எடப்பாடி பழனிசாமி இதுவரை செய்யாத போது, அவரது இல்லம் அமைந்த இடத்திற்கு அவரது பெயரையே தெருவிற்கு சூட்டியது மட்டுமல்லாமல், அவருக்கு இன்று சிலை திறக்க சென்றவர் தான் தமிழக முதல்வர்.

மக்களை ஏமாற்றும் பொது சிவில் சட்டத்தை முதலில் எதிர்த்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். முதன்முதலில் கலப்பு திருமணத்தை சட்டமாக்கியது கலைஞர் என்றால், அவர்களுக்கு நிதிஉதவி அளித்தது முதல்வர் ஸ்டாலின். இந்தியா என்ற கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தமிழக முதல்வர் இருப்பார். 2024 ஆம் தேர்தலில் முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ, அவரே இந்தியாவின் பிரதமராக ஆவார், எனக் கூறினார்.

Views: - 363

0

0